- தென்காசி மாவட்டம்
- தென்காசி
- கலெக்டர்
- கமல் கிஷோர்
- தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்
தென்காசி ஏப்.10: தென்காசி மாவட்டத்தில் ஏப்.17ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில். ஏப்ரல் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப் படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Loginல் தங்களது சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Employer Loginல் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04633-213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தென்காசி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
The post தென்காசி மாவட்டத்தில் ஏப்.17ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.
