- திருப்பரங்குன்றம்
- மதுரை அரசு மருத்துவமனை
- பழனி
- அஷ்டலட்சுமி நகர்
- கீழமாத்தூர்
- திருப்பரங்குந்திரம் யூனியன்
- கிரிஜா
திருப்பரங்குன்றம், ஏப். 10: திருப்பரங்குன்றம் அருகே தெருநாய் கடித்ததில் காயமடைந்த சிறுமி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் யூனியனுக்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் கிரிஜா(7). இந்த சிறுமி நேற்று மாலை தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது வந்த தெரு நாய் சிறுமியை கடித்து முட்புதருக்குள் இழுத்து சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் நாயை விரட்டி சிறுமியை மீட்டு கீழமாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நாய் கடித்ததில் சிறுமிக்கு தொடை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை நாய் கடித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த அல்லது பிடித்து வேறு பகுதியில் விடுவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருப்பரங்குன்றம் அருகே தெருநாய் கடித்து சிறுமி காயம் appeared first on Dinakaran.
