×

சமரச விழிப்புணர்வு பிரசார பேரணி

 

திண்டுக்கல், ஏப். 10: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட சமரச தீர்வு மையத்தில் சமரச நாள் தொடக்க விழா முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி சமரச விழிப்புணர்வு பிரச்சார பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, சமரசத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் சமரசம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இவ்விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தனியார் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சமரச விழிப்புணர்வு பிரசார பேரணி appeared first on Dinakaran.

Tags : Conciliation Awareness Campaign Rally ,Dindigul ,Conciliation Day ,District Conciliation and Resolution Center ,Dindigul Integrated Court Complex ,Principal District Judge ,Muthusaradha ,Conciliation Awareness Campaign Rally… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா