×

ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு; ஒன்றிய அமைச்சர் பதிலளிக்க மறுப்பு

ஊட்டி: ஊட்டியில் பாஜக மண்டல தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர உயர்நீதிமன்ற உத்தரவு படி இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்கத்தினர் என்னிடம் தெரிவித்தனர். இங்குள்ள மக்கள் சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளனர். இப்பிரச்னை சட்டப்படியாக அணுக வேண்டிய விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிட அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதிலளிக்காமல் காரில் ஏறி சென்று விட்டார்.

The post ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு; ஒன்றிய அமைச்சர் பதிலளிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : UNION MINISTER ,Ooty ,BJP ,Union Deputy Minister ,L. Murugan ,Court ,Nilgiri District Ooty ,Godaikanal ,
× RELATED சொல்லிட்டாங்க…