×

பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? எது பெரியது பேரவையில் வானதி சீனிவாசன் அமைச்சர்களிடையே காரசார விவாதம்


சென்னை: பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? எது பெரியது என்று பேரவையில் இன்று பாஜக உறுப்பனிர் வானதி சீனிவாசன் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் காரசார விவாதம் நடந்தது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழகத்தில் வேலைக்காக இளைஞர்களும், வேலைவாய்ப்பு வழங்க நிறுவனங்களும் தயாராக உள்ளன. மாணவர்களுக்கு தொழில் பயிற்சித் திறனை அதிகரிக்க தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்.

சி.வி.கணேசன்(தொழிலாளர் நலத்துறை அமைச்சர்): தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர் பயன்பெற்று வருகின்றனர்.

அப்பாவு(பேரவைத்தலைவர்): வேலைவாய்ப்பு வழங்குவோருக்கும், வேலை தேடுவோருக்கும் இணைப்பு பாலம் கேட்டீர்கள். அதற்கு நான் முதல்வன் தான் அந்த இணைப்பு பாலம் என அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

வானதி சீனிவாசன்(பாஜக உறுப்பினர்): அந்த இணைப்பு பாலம் வலுவாக இருக்க வேண்டும் என்பதையே நான் தெரிவித்தேன்.

சிவசங்கர்(போக்குவர்த்து துறை அமைச்சர்): இந்த இணைப்பு பாலம் பாம்பன் பாலம் போல இருக்காது. திராவிட மாடல் பாலம் தரமாகவும், உறுதியாகவும் இருக்கும்.

வானதி சீனிவாசன்(பாஜக உறுப்பினர்): பாம்பன் பாலம் இந்திய தொழில் நுட்பத்தில் இந்திய பொறியாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. திமுகவின் சித்தாந்தத்தை குறிப்பிடுவதாக கூறி இந்தியர்களின் பணியை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

சிவசங்கர்(போக்குவரத்துத்துறை அமைச்சர்): நீங்கள் பேரவைக்குள் சொல்வதும் உங்கள் கட்சித்தலைவர்கள் வெளியே பேசுவதும் வெவ்வேறாக உள்ளது. தமிழகம் பின் தங்கியிருப்பதை போலவும், தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வங்களை போல பேசுகிறார்கள்.

வானதி சீனிவாசன்(பாஜக உறுப்பினர்): சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதை விட, என் நண்பர்கள் கட்சிக்காரர்கள் பேசுவதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எங்கேயும் தமிழகத்தை குறைத்து மதிப்பிடவில்லை. பெருமைப் படுகிறோம்.

The post பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? எது பெரியது பேரவையில் வானதி சீனிவாசன் அமைச்சர்களிடையே காரசார விவாதம் appeared first on Dinakaran.

Tags : Pompon Bridge ,Dravitha ,Model ,Bridge ,Vaanati Sinivasan ,Barawawa ,Chennai ,Bombon Bridge ,Dravitha Model Bridge ,BJP ,Vanati Sinivasan ,Tamil Nadu ,Legislature ,
× RELATED சென்னை பல்கலை துணைவேந்தர் மசோதா...