- மீனவர் சங்கம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- உடன்குடி
- மீன்வளம்-மீனவர் நலத்துறை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தின மலர்
உடன்குடி, ஏப். 9: மீனவர்களின் நலனுக்காக ரூ.576.73 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை மீனவ சங்க பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீன்வளம்- மீனவர் நலன் துறை சார்பில் நடந்த மானியக் கோரிக்கையில் மீனவ பெருமக்களின் நல்வாழ்விற்காக ரூ.576 கோடியே 73 லட்சம் செலவில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதற்காக தங்கச்சி மடம், நாகப்பட்டினம், பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் கூட்டமைப்பினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் காதர்பாட்சா (எ)முத்துராமலிங்கம், நாகைமாலி, முகமது ஷா நவாஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாநில மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த மீனவ சங்க பிரதிநிதிகள் appeared first on Dinakaran.
