×

வக்பு சட்டத்திற்கு எதிராக சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஏப்.9: சிவகங்கை அரண்மனைவாசல் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல் சட்டத்திற்கு விரோதமான வக்பு திருத்த மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசை கண்டித்தும், மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் பாலையா, இளையகௌதமன் தலைமை வகித்தனர். மண்டல துணை செயலாளர் முத்துராசு முன்னிலை வகித்தார்.

மாநில துணைச்செயலாளர் பெரியசாமி, மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன் கண்டன உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணைச்செயலாளர் சுடர்மணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆதிவளவன் நிர்வாகிகள் ரவி, சேட்டு, ஆதி, ஜான்சன், ராஜேந்திரன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post வக்பு சட்டத்திற்கு எதிராக சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivaganga Palace gate ,Liberation Tigers ,Tamil Nadu ,Union government ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி