- மதுரை-சென்னை
- Avaniyapuram
- மதுரை விமான நிலையம்
- சென்னை
- பெங்களூரு
- ஹைதெராபாத்
- தில்லி
- மும்பை
- விஜயவாடா
- கொழும்பு
- துபாய்
- பினாங்கு
- மலேஷியா
- சென்னை…
- மதுரை-
- தின மலர்
அவனியாபுரம், ஏப். 9: மதுரை விமான நிலையத்திலிருந்து தினசரி சேவையாக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை, விஜயவாடா நகரங்களுக்கு உள்ளூர் சேவையையும், கொழும்பு, துபாய் என இரு நகரங்களுக்கு, சென்னை வழியாக மலேசியா பினாங் நகருக்கு வெளிநாட்டு சேவையாக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் அதிக பட்சமாக மதுரையிலிருந்து சென்னைக்கு தினசரி 10 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
வரும் மே 1ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தினசரி விமானச் சேவையாக சென்னை-மதுரை இடையே 11வது சேவையை வழங்க உள்ளது. அதன்படி சென்னையிலிருந்து தினசரி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து சேரும். மறுமார்க்கமாக இரவு 8.10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சென்னை சென்றடையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
The post மதுரை-சென்னை இடையே கூடுதல் விமான சேவை appeared first on Dinakaran.
