×

நெல்லை டவுன் பகுதியில் இளைஞர் அடித்து கொன்று புதைப்பு: போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லை டவுன் பகுதியில் 20 வயது இளைஞர் அடித்து கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே ஆறுமுகம் என்ற 20 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் கொலை சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து நெல்லை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இளைஞரை கொன்று புதைத்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு தப்பிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post நெல்லை டவுன் பகுதியில் இளைஞர் அடித்து கொன்று புதைப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Paddy ,Paddy Town ,Arumugam ,Nellai Town Kurunathan Temple ,Rice Town ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...