×

வி.வி.பேட் வாக்குகளை எண்ணக்கோரிய மனு; உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் நடைபெறும் தேர்தலின் போது மின்னனு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை தவிர, வி.வி.பேடில் பதிவாகும் வாக்குகளை நூறு சதவீதம் மனிதர்களால் எண்ண வேண்டும். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என ஹான்ஸ் ராஜ் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து மேற்கண்ட மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட போது எந்த பதிலும் வராத காரணத்தினால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்ததால் தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என்று தெரித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த பிரச்சனையை கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் விரிவாக ஆராய்ந்துள்ளதால் மீண்டும் இதனை விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post வி.வி.பேட் வாக்குகளை எண்ணக்கோரிய மனு; உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : SUPREME COURT ,New Delhi ,Hans Raj Jain ,Chief Electoral Commission of India ,Dinakaran ,
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...