×

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்கள் ஏப்.10ம் தேதி மூடல்


சென்னை: மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற வரும் 10ம் தேதி (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

The post மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்கள் ஏப்.10ம் தேதி மூடல் appeared first on Dinakaran.

Tags : Mahavir Jayanti Day ,Chennai ,Chennai Municipal Corporation ,Perampur ,Williwakkam ,Kallikupam ,Saithapet ,Chennai Municipality, Public Health Department ,Veterinary Division ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!