×

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 37 இடத்தில் தண்ணீர் பந்தல்


திருவொற்றியூர்: கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் ஆலோசனையின்படி, மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார் முன்னிலையில், சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர், எண்ணூர், மணலி மற்றும் மணலி புதுநகர், மாதவரம், புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 37 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

திருவொற்றியூர் மத்திய பகுதி துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், ஏற்பாட்டில் மணலி எம்ஜிஆர் நகர், மகேந்திரன் ஏற்பாட்டில் பாடசாலை தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் திறந்துவைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர், நீர், மோர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். கிழக்கு பகுதியில் துணை அமைப்பாளர்கள் மோகன்ராஜ் ஏற்பாட்டில், சன்னதி தெரு, மணிகண்டன் ஏற்பாட்டில் பெரியார் நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் திறந்துவைத்தனர்.

மேற்கு பகுதியில் இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்மாறன் என்ற மனோஜ் ஏற்பாட்டில், எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சுதர்சனம் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன், கவுன்சிலர் தம்பியா என்ற தமிழரசன் ஆகியோர் திறந்துவைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நீர், மோர் வழங்கினார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், பகுதி அவைத்தலைவர் ஆர்.சி.ஆசைத்தம்பி, துணை அமைப்பாளர்கள் கேபிள் கணேசன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 37 இடத்தில் தண்ணீர் பந்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai North East District DMK Youth Wing ,Chief Minister ,M.K. Stalin ,Youth Wing ,State ,Deputy Secretary ,Thoothukudi S.Joyal ,R.T.Mathankumar ,Chennai North East District ,Thiruvottriyur ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...