- கரூர் சர்ச் கார்னர்
- கரூர்
- வேலாயுதம்பாளையம்
- வெங்கமெடு
- ரயில் நிலையம்
- வாங்கல்
- Nerur
- சோமூர்
- சேலம் பைபாஸ் சாலை
- மோகனூர்
- புலியூர்…
- தின மலர்
*பயணிகள் கோரிக்கை
கரூர் : கரூர் சர்ச் கார்னர் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்குடை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூரில் இருந்து வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, ரயில்வே நிலையம், வாங்கல், நெருர், சோமூர், சேலம் பைபாஸ் சாலை, மோகனு£ர், புலியூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சர்ச் கார்னர் வழியாக சென்று வருகிறது.
அதிகளவு வாகனங்கள் செல்வதால் இந்த பகுதியில் பயணிகள் நலன் கருதி சில ஆண்டுகளுககு முன்பு நிழற்குடை அமைத்து தரப்பட்டது. போதிய பராமரிப்பு குறைவு காரணமாக ஒரு சில ஆண்டுகளில் பழுதடைந்து தற்போது பயன்படுத்திடமுடியாத நிலையில் உள்ளது. தற்போதைய நிலையிலும் ஏராளமான பேரூந்துகள் சர்ச் கார்னர் வழியாக செல்கிறது.
பொதுமக்களும் இதன் அருகில் நின்றுதான் பேரூந்துகளில் ஏறிச் செல்கின்றனர், ஆனால், நிழற்குடை வளாகம் மோசமான நிலையில் உள்ளதால் பயணிகள் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை,எனவே, அனைவரின் நலன் கருதி இந்த நிழற்குடை வளாகத்தை புதுப்பித்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது,. துறை அதிகாரிகள் இநத விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கரூர் சர்ச் கார்னர் பகுதியில் பழுதடைந்த நிழற்குடையை புதுப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.
