அந்தியூர் : சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோயில் திருவிழாவில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வது வழக்கம். நவீன காலமாக இருந்தாலும் மாட்டு வண்டியில் ஒரு நாளைக்கு முன்பு திருவிழாவுக்கு சென்று தங்கி பொங்கல் வைத்து தாங்கள் உடன் கொண்டு சென்ற கோழி, ஆடுகளை வெட்டி பலியிட்டு சாமி தரிசனம் செய்வர்.
நாளை குண்டம் திருவிழா நடக்க உள்ள நிலையில் நேற்று அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் உடன் விவசாயிகள் அந்தியூரில் இருந்து அத்தாணி, சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றனர். ஒரே சமயத்தில் நீண்ட வரிசையில் தொடர்ந்து மாட்டுவண்டிகளாக செல்வதை ஊர் பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.
இதுகுறித்து மாட்டு வண்டியில் சென்ற விவசாயி ஒருவரிடம் கேட்டபோது, முன்பெல்லாம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு 2 நாட்களுக்கு முன்பே மாட்டுவண்டி கட்டிக்கொண்டு செல்வது வழக்கம்.அப்படி அங்கு சென்று ஒரு நாள் தங்கி சாமி தரிசனம் செய்து வந்தால் விவசாயம் செழிக்கும், கால்நடைகள் நோய் நொடியின்றி உழவிற்கு பயன்படும் எனக்கு கூறினர்.
The post பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு மாட்டு வண்டிகளில் பயணித்த விவசாயிகள் appeared first on Dinakaran.
