
கோபி : கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே 700 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது கொடிவேரி அணையாகும். இங்கு சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க முடியும்.
இதனால் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. இதனால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன் தினம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி அணை மூடப்பட்டது.
நேற்று அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். கொடிவேரி அணையில் அருவி போல் தண்ணீர் கொட்டியதால் இங்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அணையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதே போன்று அணையின் மேல் பகுதியில் பரிசலில் குடும்பம் குடும்பமாக உற்சாகமாக பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர்.‘
அணையின் மேல் பகுதியில் ஆழம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் கட்டாயம் ”லைப் ஜாக்கெட்” அணிந்த பிறகே பரிசலில் ஏற்றி செல்ல வேண்டும்.
ஆனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ”லைப் ஜாக்கெட்” அணியாமலேயே பரிசலில் பயணிக்கின்றனர். இது போன்று லைப் ஜாக்கெட் அணியாமல் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் பரிசல் ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.
