- ஜனாதிபதி முர்மு
- போர்ச்சுகல்
- ஸ்லோவாகியா
- புது தில்லி
- ஒன்றிய வெளியுறவு அமைச்சு
- ரந்தீர் ஜெயஸ்வால்
- ஜனாதிபதி
- முர்மு
- திரௌபதி முர்மு
- தின மலர்
புதுடெல்லி: இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில்,ஜனாதிபதி முர்மு இன்றும், நாளையும் போர்ச்சுகலில் சுற்றுபயணம் செய்கிறார். கடந்த 25 ஆண்டுகளில் அந்த நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய தலைவர் திரவுபதி முர்மு ஆவார். இந்த பயணத்தின் போது போர்ச்சுகல் அதிபர் மார்செல்லோ ரிபெல்லோ டிசோசா,பிரதமர் லுவாஸ் மான்டினிக்ரோ,நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஸ் பெட்ரோ அகியார் பிராங்கோ ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
லிஸ்பன் நகர மேயர் கார்லோஸ் மனுவேல் பெலிக்ஸ் மொய்டாஸ் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். இதை தொடர்ந்து 9ம் தேதி அவர் மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேக்கியா செல்கிறார். அந்த நாட்டின் அதிபர் பீட்டர் பெல்லேகிரினி, பிரதமர் ராபர்ட் பிக்கோவை சந்தித்து பேச உள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post ஜனாதிபதி முர்மு 4 நாள் பயணமாக போர்ச்சுகல், ஸ்லோவேக்கியா சென்றார் appeared first on Dinakaran.
