புதுடெல்லி: பாஜ நிறுவன நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜ கட்சி கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று நாடு முழுவதும் பாஜ நிறுவன நாளை அக்கட்சியினர் கொண்டாடினர். பாஜ நிறுவன நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன் எக்ஸ் தள பதிவில், “பாஜ தொண்டர்களுக்கு என் வாழ்த்துக்கள். கடந்த பல ஆண்டுகளாக கட்சியை வலுப்படுத்த தங்களை அர்ப்பணித்து கொண்ட அனைவரையும் நினைவுகூருகிறோம்.
இந்தியாவின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்கவும் நமது இணையற்ற உறுதிப்பாட்டை இந்த முக்கியமான நாள் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்திய மக்கள் நம் கட்சி தரும் நல்லாட்சியை பார்க்கிறார்கள். இது கடந்த ஆண்டுகளில் நாம் பெற்ற வரலாற்று தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கிறது. நமது அரசு தொடர்ந்து சமூகத்துக்கு சேவை செய்து, அனைத்து வகையான வளர்ச்சியையும் உறுதி செய்யும்” என பதிவிட்டுள்ளார்.
The post பாஜ நிறுவன நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.
