×

ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேர் பிடிபட்டனர்: 34 டிக்கெட், ரூ.30,600 பறிமுதல்

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 டிக்கெட்கள் மற்றும் ரூ.30,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றம் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன்படி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயசந்திரன் உத்தரவுப்படி போலீசார் மைதானம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் கள்ளச்சந்தையில் ஐபிஎஸ் டிக்கெட் விற்றதாக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (24), ஆலந்தூர் பகுதியை சேர்ந்த ரூபேஷ் (24), ஆவடியை பகுதியை சேர்நத் விஷ்ணு (19),

கொளத்தூர் பகுதியை சேர்ந்த சேது ரோஷன் (20), திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சந்திரன் (52), அசோக் நகரை சேர்ந்த ஸ்ரீராம் (25), கும்மிடிபூண்டியை சேர்ந்த அரவிந்த் (20), திருவொற்றியூரை சேர்ந்த சாலமன் (19), கேரள மாநிலத்தை சேர்ந்த வினித் (28), சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (23), கோட்டூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 ஐபிஎல் டிக்கெட் மற்றும் ரூ.30,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேர் பிடிபட்டனர்: 34 டிக்கெட், ரூ.30,600 பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : IPL cricket ,Chennai ,Thiruvallikeni ,Chennai Super Kings ,M.A. Chidambaram Cricket Stadium ,Chepauk, Chennai… ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!