சென்னை: தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் (2025-26) ஜூன் பருவத்தின் சேர்க்கைக்கான தொலைதூரப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைத்தூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 4ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதியுடன் முடிவடைந்தது.
தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகுதியான கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ எனும் வலைத்தளம் வழியாக ஏப்ரல் 30ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்தில் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.