- கிரிஸ்துவர்
- ரகுலகந்தி
- புது தில்லி
- ராகுல் காந்தி
- கடுமையாக சாடி
- திமுகா
- காங்கிரஸ்
- மத்முகா
- விடுதலை சிறுத்தைகள்
- ஆதிமுக
- வக்பு வாரியம்
- ராகுல்கந்தி
புதுடெல்லி: “வக்பு திருத்த மசோதா பிற சமூகங்களை குறி வைப்பதற்கு ஒரு முன்னுதாரணம்” என ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த 2ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து 3ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு 128 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார். இந்த மசோதா தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வௌியான கட்டுரையை தன் எக்ஸ் தள பதிவில் வௌியிட்டுள்ள ராகுல் காந்தி, “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தற்போது முஸ்லிம்களை தாக்குகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற மசோதாக்கள் பிற சமூகங்களை குறி வைக்கும் என்பதற்கு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா ஒரு முன்னுதாரணம். கிறிஸ்தவர்கள் மீது கவனம் செலுத்த ஆர்எஸ்எஸ்சுக்கு அதிக நேரமாகாது. அரசியல் சாசனம் மட்டுமே இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரே கேடயம். அதனால் அரசியல் சாசனத்தை பாதுகாப்பது நமது கூட்டு கடமை” என தெரிவித்துள்ளார்.
The post வக்பு திருத்த மசோதா போல் கிறிஸ்தவர்களையும் குறிவைக்க அதிக நேரமாகாது: ராகுல்காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.
