×

அண்ணா சிலையில் கட்டப்பட்ட பாஜ கொடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த சிலை அருகே உள்ள மண்டபத்தில் திமுக மகளிரணி சார்பில் நேற்று மாலை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக தஞ்சை பேருந்து நிலையம் அருகே திமுக கொடிகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று காலை அண்ணா சிலையில், அவரது கழுத்தில் திமுக கொடியுடன் பாஜ கொடி கட்டப்பட்டிருந்தது. இதையறிந்த திமுகவினர் அண்ணா சிலை முன்பு திரண்டனர். தஞ்சை மேற்கு போலீசார் சென்று அண்ணா சிலை கழுத்தில் அணிவித்திருந்த பாஜ கொடியை அகற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அண்ணா சிலையில் கட்டப்பட்ட பாஜ கொடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Anna ,Thanjavur ,DMK Women's Wing ,DMK… ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...