×

திமுக எம்பி மீதான வழக்கு ரத்து

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது, கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, கொரோனா விதிகளை மீறி தேனி மாவட்டம் சங்கராபுரம், போடி உள்ளிட்ட ஊர்களில் திமுக சார்பில் இருசக்கர பேரணி நடத்தியதாக தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்டோருக்கு எதிராக போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தற்போதைய திமுக எம்.பி.யான தங்க தமிழ்செல்வன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. கொரோனா விதிமீறல் வழக்குகளை திரும்பப் பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டும், தனக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக எம்.பி. தங்க தமிழ்செல்வன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post திமுக எம்பி மீதான வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Corona ,Thangathamizh Selvan ,Shankarapuram ,Bodi ,Theni district ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...