×

மனித உரிமை ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. காவல் உதவி ஆணையர் இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முழு விசாரணை நடத்தப்படாமல், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பித்தது மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் மனைவியை உதவி ஆணையராக இருந்த இளங்கோவன் மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டது.

 

The post மனித உரிமை ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Human Rights Commission ,Madras High Court ,Chennai ,State Human Rights Commission ,Assistant Commissioner of ,Assistant Commissioner ,Elangovan ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை மையமாக வைத்து கூடுதல்...