×

வக்பு வாரிய திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

புதுடெல்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு, 12 மணி நேர விவாதத்துக்குப்பின் நிறைவேறியது. இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அப்போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தனர்.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய கிரண் ரிஜிஜூ, “முன்மொழியப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை. சொத்துகளுடன் மட்டுமே தொடர்புடையது. வக்பு வாரிய திருத்த மசோதா முஸ்லிம்களின் உரிமையை பறிக்காது. அது முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. அவர்களின் மத உணர்வை புண்படுத்துவது அல்ல. மாறாக பெண்களுக்கு அதிகாரமளிப்பது, அனைத்து முஸ்லிம் பிரிவுகளையும் வக்பு வாரியத்தில் சேர்ப்பது, அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது.

மேலும் வக்பு வாரியம் சொத்துகளை நிர்வகிக்க அல்ல, மேற்பார்வையிட மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் 4.9 லட்சம் வக்பு சொத்துகள் இருந்தன. தற்போது அது 8.72 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய அளவிலான சொத்துகளை வக்பு வாரியம் வைத்துள்ளது.

அரசாங்கம் ஒரு நல்ல நோக்கத்துடன் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் பெயரில் எந்த பிரச்னையும் இருக்க கூடாது. எனவே வக்பு மசோதா ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரமளித்தல் செயல்திறன் மற்றும் மேம்பாடு மசோதா என பெயர் மாற்றப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்

The post வக்பு வாரிய திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Wakpu Board ,House of Commons ,Union Minister of Minority Affairs ,Kiran Rijiju ,Vakpu Board ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...