×

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டி ஆலோசனை முகாம்

சிவகங்கை, ஏப். 4: சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் (ஏப்.6) பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு படிப்புகள் குறித்த வழிகாட்டி ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் என் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

2025ம் கல்வியாண்டிற்கான பிளஸ்டூ மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த வழிகாட்டி ஆலோசனை முகாம், தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு சிவகங்கை, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டி ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Sivaganga Government Women's Arts and Science College ,Asha Ajith… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி