- சிவகங்கை
- சிவகங்கை ஆட்சியர் அலுவலகம்
- தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்
- விக்டோரியா
- மாவட்ட துணைத் தலைவர்கள்
- அழகம்மாள்
- உதயநிலை
- ராஜபதி
- சுமதி
சிவகங்கை, ஏப். 4: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் விக்டோரியா தலைமை வகித்தார். மாவட்டத்துணைத் தலைவர்கள் அழகம்மாள், உதயநிலை, ராஜாத்தி, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வக்குமார் தொடக்கி வைத்தார்.
இதில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் அடிப்படை ஊதியம் ரூ11,100 வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் இக்னிஸ் ஜோஸ்பின்ராணி நன்றி கூறினார்.
The post சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
