கமுதி, ஏப். 4: கமுதி அருகே எழுவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூடக்குளம் கிராமத்தில், ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் விழாவிற்கு தலைமை தாங்கி புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சந்திரமோகன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியேந்திரன், பரமசிவம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் மம்முது, மார்க்கண்டன், ராமர், நாகராஜ், ராமச்சந்திரன், மாரீஸ்வரன், ஊராட்சி செயலர் ராஜிவ்காந்தி, அங்கன்வாடி பணியாளர் தங்கமீனாள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
The post கமுதி அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.
