×

மங்களநாதசாமி கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை


ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்.1537 பொது(பல்வகை)த் துறை நாள்: 03.04.2025-ன்படி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் மகாகும்பாவிஷேகம் விழாநாளை நடைபெறுவதால் அன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு பொதுத்தேர்வு மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) “உள்ளூர் விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு மே.10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், நாளை ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவித்துள்ளார்.

The post மங்களநாதசாமி கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Mangalanathasamy Temple Gudarukku ,Ramanathapuram ,District ,Governor ,Simranjeet Singh Calon ,Mangalanathasami Temple Kudarukku Ceremony ,Tomorrow ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...