×

சென்னை, செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்துள்ளது. பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னை நகர் முழுவதும் காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

The post சென்னை, செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chengalpattu ,Pallavaram ,Chromepet ,Pammal ,Anakaputhur ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...