×

3வது போட்டியிலும் தோல்வியால் ஒயிட்வாஷ்; நாங்கள் கற்றல், நினைவுகளுடன் திரும்பிச்செல்வோம்: இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி

கேப்டவுன்: தென்ஆப்ரிக்கா-இந்தியா இடையே 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 49.5 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக டிகாக் 124 ரன் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய இந்தியா 49.2 ஓவரில் 283 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது. டிகாக் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், கடைசி கட்டத்தில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. இருப்பினும் வெற்றி பெற்றது. மனநிறைவை தருகிறது. இரண்டு தொடர்களையும் வெல்வது எங்கள் நம்பிக்கைக்கு நல்லது, என்றார். இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், தீபக்சாகர் எங்களுக்கு ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான உண்மையான வாய்ப்பைக் கொடுத்தார். மிகவும் பரபரப்பான ஆட்டம், ஏமாற்றத்துடன் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பது தெளிவாகத் தெரிகிறது, எங்கள் ஷாட் தேர்வு பேட்ஸ்மேன்களாக மிகவும் மோசமாக இருந்தது. எதிரணிக்கு அழுத்தம் கொடுக்காததால் தொடரை இழந்தோம். கண்ணாடியில் நம்மைப் பார்த்துக் கொண்டு சில கடினமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. நாங்கள் கற்றல் மற்றும் நினைவுகளுடன் திரும்பிச் செல்வோம், என்றார்….

The post 3வது போட்டியிலும் தோல்வியால் ஒயிட்வாஷ்; நாங்கள் கற்றல், நினைவுகளுடன் திரும்பிச்செல்வோம்: இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி appeared first on Dinakaran.

Tags : K. l. Raqul ,South Africa ,India ,K. l. Raquel ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...