×

ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர், ஏப். 3: திருப்பூர் ரயில்வே காவல்துறை மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2 சார்பாக நேற்று ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூவந்திகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர், மாணவர்கள் மத்தியில் பேசுகையில், அனைவரும் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யவேண்டும்.

ரயிலில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் புகார் செய்வதற்கு ரயில்வே காவல்துறை பல்வேறு தொடர்பு எண்களை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் உதவி எண் 1512, ரயில்வே பாதுகாப்பு படை 139, பெண்கள் உதவி மையம் 1091, குழந்தைகள் உதவி மையம் 1098 என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் ரயில்வே காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Tiruppur Railway Police ,Chikanna Government Arts College National Welfare Project Unit ,Inspector ,Ruwanthika ,safety ,Dinakaran ,
× RELATED கல்வி நிறுவனங்களில் களைகட்டிய பொங்கல் விழா