×

மீன்பாசி குத்தகை உரிமம்; மீன்வள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

பேரவையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய மானிய ேகாரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கீழ்வேளூர் நாகை மாலி(மார்க்சிஸ்ட் கம்யூ) பேசியதாவது:
விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வழங்காமல், அரசே ஏற்று நடத்தலாம். இயற்கை பாதிப்பிற்கு தமிழக அரசு கோரும் நிதியினை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். மீன்பாசி குத்தகை உரிமத்தை சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்: இன்றைக்கு மீன்வளத் துறையின் மூலம் அமைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து குளங்களிலும், மீன்பாசி குத்தகை உரிமம் அளிக்கும்போது, மீன்வள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுமென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post மீன்பாசி குத்தகை உரிமம்; மீன்வள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,Agriculture ,Farmers Welfare ,Animal Husbandry ,Dairying, Fisheries and Fishermen Welfare ,Kilvelur Naga Mali ,Marxist Commune ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...