- உலக குழந்தைகள் புத்தக தினம்
- பூவரசக்குடி பஞ்சாயத் யூனியன் மத்திய
- பள்ளி
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை இலக்கிய சபை
- பூவரசக்குடி பஞ்சாயத் யூனியன் மத்திய பள்ளி
- புதுக்கோட்டை
- தலைமை ஆசிரியர்
- ஆரங்குளவன்
- ஜனாதிபதி
- புதுக்கோட்டை இலக்கிய சபை...
- தின மலர்
புதுக்கோட்டை, ஏப்.3: புதுக்கோட்டை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தகம் நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தலைமையாசிரியர் அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் தலைவர் பேராசிரியர் பூர்ணிமா, பள்ளி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்ச் செம்மல், கவிஞர் ரமா ராமநாதன் கலந்து கொண்டு வினாடி-வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும், நூலகம் உள்ளது. அந்த வகையில் இந்த கிராமத்திலும் நூலகம் உள்ளது. இந்த நூலத்திற்கு நாள் தோறும் மாணவச் செல்வங்களை நீங்கள் செல்ல வேண்டும். இந்த பள்ளியிலிருந்து கீரத்தனா என்ற மாணவி அதனை செய்து வருகிறார் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளேன்.
விரைவில் முழு ஆண்டு விடுமுறை வரப்போகிறது. இந்த நாட்களை வீணடிக்காமல், நூலகத்திற்குள் நீங்கள் செலவிட வேண்டும். வரலாறு, இந்திய பாரம்பரியம், வர்த்தகம், சுற்றுச்சூழல் இது போன்ற புத்தகங்களைத் தான் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்குப் பிடித்தமான கதை புத்தகங்களைக் கூட நீங்கள் படிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு கதைகள் படித்தாலே கிட்டத்தட்ட விடுமுறை முடித்து நீங்கள் பள்ளிக்கு வரும்போதும் கண்டிப்பாக 60-க்கும் மேற்பட்ட கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பெற்றோர்களும், இதில் கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் நாம் கற்றுக்கொடுக்கப் போகின்ற விஷயம் என்ன? அந்த கற்றுக் கொடுக்கின்ற விஷயம் குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கும், பிற்கால வாழ்க்கைக்கும் உதவுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு மிகவும் ஞாபகத்திற்கு வருவது பல்வேறு நிலைகளை தாண்டி புத்தகம் தான்.
செல்போன்களை தூரத்தில் வைத்துவிட்டு, புத்தகம் ஒன்றினை எடுத்து நீங்கள் படித்துப் பாருங்கள், குழந்தைகளும் படிக்கத் தொடங்கிவிடும். அப்படி, குழந்தைகள் புத்தகங்களைத் தொடர்ந்து படிப்பதன் மூலம், இன்றியமையாத பல உன்னத நலன்களை அளிக்க வல்லது. புத்திக் கூர்மை, அறிவு, சமச்சீரான எண்ண ஓட்டம். தேவையான ஆழ்ந்த உறக்கம், சகிப்புத் தன்மை, எண்ணத்தில் உறுதி போன்ற நலன்களைப் பெறுகின்றனர். குழந்தைகளும் புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக உலக இளைஞர் புத்தக இயக்கம் சார்பில் சர்வதேச குழந்தைகள் புத்தகத் தினத்தை கொண்டாடத் திட்டமிட்டது. அச்சமயம் குழந்தைகளுக்காகத் தங்கள் நல்வாழ்வை அர்ப்பணித்த எண்ணற்றோர் அவர்கள் நினைவிற்கு வந்தனர். அவர்களில் முதன்மையானவராக டென்மார்க்கைச் சேர்ந்த ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் இருந்தார். அவர் பிறந்த ஏப்ரல் 2-ஆம் தேதியை உலக குழந்தைகள் புத்தகத் தினமாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி 1967-ஆம் ஆண்டு முதல் இந்நாள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியின் முன்னதாக தமிழ் படடதாரி ஆசிரியர் ச.அடைக்கலசாமி வரவேற்றார். முடிவில் புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் செயலர் பேராசிரியர்.சுசிலாதேவி நன்றி கூறினார்.
The post பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக குழந்தைகள் புத்தகம் நாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.
