×

ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக பூனம் குப்தா நியமனம்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக பூனம் குப்தாவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ரா கடந்த ஜனவரி மாதம் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பூனம் குப்தாவை நியமிப்பதற்கு நியமனங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பதவியேற்றதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என வட்டாரங்கள் தெரிவித்தன.

பூனம் குப்தா தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின்(என்சிஏஇஆர்) இயக்குனர் ஜெனரலாக உள்ளார்.பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் மற்றும் 16வது நிதி கமிஷனுக்கான ஆலோசனை குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய பூனம் குப்தா கடந்த 2021ல் என்சிஏஇஆர்-ல் அவர் சேர்ந்தார்.

The post ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக பூனம் குப்தா நியமனம் appeared first on Dinakaran.

Tags : Poonam Gupta ,Deputy Governor ,Reserve Bank of India ,New Delhi ,Union Government ,Deputy Governor of ,Reserve ,Bank of ,India ,M.D. Batra ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...