×

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் மேடிசன் அபார வெற்றி

சார்லஸ்டன்: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சார்லஸ்டன் ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த 2வது சுற்றில் நேரடியாக களமிறங்கிய அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், சக வீராங்கனை கரோலின் டோல்ஹைட் உடன் மோதினார். ஒரு மணி 43 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் 6-3, 7-6 (6-4) என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2வது சுற்று ஆட்டத்திலும் அமெரிக்க வீராங்கனைகள் ராபின் மோன்கோமேரி, டேனியலி கொலின்ஸ் ஆகியோர் களம் கண்டனர். அதில் கொலின்ஸ், 6-3, 6-1 என நேர் செட்களில் வெற்றிப் பெற்றார். ஒரு மணி 9 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் கொலின்ஸ் 3வது சுற்றில் விளையாட உள்ளார். மற்றொரு அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிசிமோவா ஒரு மணி 6 நிமிடங்களில் 6-2, 6-2 என்ற புள்ளிக் கணக்கில் ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குதெர்மேடோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

The post சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் மேடிசன் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Charleston Open Tennis Madison Amajor Victory ,Charleston ,Charleston Open ,Southern California, USA ,Madison Keys ,Caroline Tolheid.… ,Charleston Open Tennis Madison Amajor ,Dinakaran ,
× RELATED சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன்