×

சக்தி மாரியம்மன் கோயில் விழா: அக்னி கரகத்தை வயிற்றில் வைத்து வலம் வந்த பூசாரி

அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள விராலிக்காட்டூர் சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் பூசாரி வயிற்றின் மேல் அக்னி சட்டியை வைத்து படுத்தபடி கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் விராலி காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அன்றாடம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், இன்று பொங்கல் திருவிழா நடக்கிறது. இதில் நேற்று கோயிலின் முன்பு நடப்பட்ட கம்பத்தில் அக்னி கரகம் வைக்கப்பட்டு அதில் தீமூட்டப்பட்டது. பின்னர் பூசாரி அக்னி சட்டியை வயிற்றில் வைத்துக்கொண்டும், மத்தளம் அடிப்பவர் மத்தளத்தை வயிற்றில் வைத்துக் கொண்டும் படுத்தபடி கோயிலை சுற்றி வலம் வந்தனர். ஆண்டுதோறும் இதுபோன்ற நேர்த்திக்கடனை பூசாரி மற்றும் மத்தளம் அடிப்பவர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இப்படி செய்வதால், ஊர் மக்கள் நோய் நொடியின்றி செல்வ செழிப்புடன் வாழ்வர் என்பது ஐதீகம். இதனால், இதுபோன்று இந்த ஆண்டு அக்னி சட்டியை பூசாரி வயிற்றின் மேல் வைத்தும், அவருக்கு துணையாக மத்தளம் அடிப்பவர் மத்தளத்தை அடித்துக்கொண்டும் படுத்தபடி, கோயிலை வலம்‌ வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post சக்தி மாரியம்மன் கோயில் விழா: அக்னி கரகத்தை வயிற்றில் வைத்து வலம் வந்த பூசாரி appeared first on Dinakaran.

Tags : Shakti Maryamman Temple Ceremony ,Agni Karagah ,Antyur ,Shakti Maryamman ,Agni Sati ,Virali Kattur, Erode district ,Anthiur ,Agni Karaka ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...