×

மதுரையில் நடக்கும் கபடி போட்டிக்கு பங்கேற்க மாட்டோம்: காட்டுநாயக்கன் மாநில நிர்வாக குழு அறிவிப்பு

நாகப்பட்டினம்,ஏப்.2: நாகப்பட்டினம் காட்டுநாயக்கன் தெருவில், காட்டுநாயக்கன் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உயர்மட்ட குழு தலைவர் அழகுபரமசிவம் தலைமை வகித்தார். முதன்மை செயலாளர் மனோகரன், மாநில தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முடிவில் உயர்மட்ட குழு உறுப்பினர் அழகுபரமசிவம் கூறியதாவது: தாய் சங்கத்தில் இருந்து கடந்த 1961ம் ஆண்டு பிரிந்து சென்று மீண்டும் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும் போது புதுக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா தன்னிச்சையாக மதுரையில் நடத்தப்படும் கபடி போட்டிக்கு யாரும் பங்கேற்க மாட்டோம் என்றார். மாநில துணைதலைவர் அண்ணாமலை, மாநில பொது செயலாளர் பாஸ்கரன், மாநில துணை செயலாளர் பழனி, மாநில பொருளாளர் காசிரமேஷ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாலமுருகன்,மாநில துணை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மதுரையில் நடக்கும் கபடி போட்டிக்கு பங்கேற்க மாட்டோம்: காட்டுநாயக்கன் மாநில நிர்வாக குழு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kabaddi ,Madurai ,Kattunayakkan State Administrative Committee ,Nagapattinam ,Kattunayakkan Street ,Azhaguparamasivam ,Principal Secretary ,Manoharan ,State ,President ,Pandian ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி