தேனி, ஏப். 2: தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கன்னிமார்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கான நீர்வரத்து பெரியாறு அணையில் திறந்து விடப்படும் நீரினை ஆதாரமாக கொண்டுள்ளது. இக்கண்மாயின் மூலம் 104 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இக்கண்மாயில் தேனி மாவட்ட மீன்வளத்துறை நிர்வாகம் மூலமாக மீன்கள் வளர்க்க ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்த கண்மாயில் தற்போது முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் மீன்வளர்ப்பதும் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கண்மாயில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் மீன்வளர்க்க முடியாமல் உள்ளது. கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து தண்ணீர் நிரம்பி இருந்ததால் ஆகாயத்தாமரைகளை அகற்றுவது சிரமமாக இருக்கும் என பொதுப்பணித்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது கண்மாய் வற்றி வரும் நிலையில், கோடை காலத்திலேயே முழுமையாக ஆகாயத் தாமரை செடிகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும் என்றனர்.
The post ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பில் கன்னிமார்குளம் கண்மாய் கோடைக்குள் தூய்மைப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.