×

ரம்ஜான் பண்டிகையையொட்டி உணவுப்பொருட்கள் வழங்கல்

தொண்டி, ஏப். 2: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் தமுமுக சார்பில் ஏழை மக்களும் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி, இறைச்சி, புத்தாடை உள்ளிட்டவை வழங்கும் பித்ர் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நம்புதாளை கிளை சார்பில் கிளை தலைவர் சேகு நெய்னா தலைமையில் சதக்கத்துல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தர்மம் 140 ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமுமுக, மமக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி, தமுமுக மாவட்ட துனை தலைவர் சாகுல் ஹமிது நிஹ்மத்துல்லாஹ் மாஸ் சகுபர், உலாமக்கள் அனி ஆலிம் முகம்மது ஆசாத், தகவல் தொழில்நுட்ப அணி ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் பஹ்ருல்லா ஷா உட்பட தமுமுக மமக கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

The post ரம்ஜான் பண்டிகையையொட்டி உணவுப்பொருட்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Ramzan festival ,Thondi ,Tamil Nadu Muslim League ,TML ,Nambudalai ,Ramzan ,Ramanathapuram East ,District ,Tamil Nadu Muslim Development… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா