×

கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது

 

புதுச்சேரி, ஏப் 2: புதுச்சேரி மங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஏம்பலம் ரோடு சாராயக்கடை அருகே அவர்கள் சென்றபோது, 2 பேர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி கொண்டிருப்பதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில், கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகம் (எ) விநாயகமூர்த்தி (35), அய்யனார் (எ) சின்னஅய்யனார் (எ) ரோஸ் அய்யனார் (25) என்பதும், இவர்கள் இருவரும் பிரபல ரவுடி ஜோசப்பின் கூட்டாளிகள் என்பதும், இரண்டு பேர் மீதும் புதுவை மற்றும் தமிழகத்தில் கொலை உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், வழக்கு செலவுக்காக இருவரும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 2 கத்தியை பறிமுதல் செய்தனர்.

The post கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Sub-Inspector ,Periyasamy ,Mangalam police station ,Embalam Road ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி