×

அண்ணாமலைக்கு டெல்லியில் பளார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

 

பெரம்பூர், ஏப். 2: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புளியந்தோப்பு பட்டாளம் சிவராவ் ரோடு மற்றும் சூளை அங்காளம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ‘‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’ நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.

தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் வடக்கு பகுதி 78 (அ) வட்ட திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: 41வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வருகிற 10ம் தேதி 50வது நிகழ்ச்சி கொளத்தூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

விழா காலங்களில் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் பிரகாரங்களை சுற்றி தரை விரிப்பு போடப்படும். குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்பாராமல் நடக்கும் கொலைகளுக்கு உடனடியாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்கின்றனர், எந்தவிதமான அதிரடி நடவடிக்கைக்கும் காவல்துறை தயாராக உள்ளது.

குற்றங்களை தடுப்பது ஒரு புறம் இருந்தால் குற்ற சம்பவங்கள் ஏற்படும்போது அதன் மீதான நடவடிக்கையும் கருத்தில் கொள்ள வேண்டும். தொடர் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை உடனடியாக சாமர்த்தியமாக காவல்துறை கையாண்டு குற்றவாளிகளை கைது செய்தது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழக காவல்துறை தற்போது குற்றவாளிகளை கைது செய்து வருகிறது. எதிர்பாராத முன் விரோதம் காரணமாக படுகொலைகள் நடக்கிறது.

கடந்த காலத்தை விட தற்பொழுது தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. பாஜ தலைவர் அண்ணாமலைக்கு டெல்லியில் பளார் பளார் என்று அரை விட்டார்கள். அதை மறைக்க ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவு சரியில்லை, என்று அண்ணாமலை சொல்கிறார். ஆதிதிராவிடர் நல விடுதியில் உணவு தரம் இல்லை என்றால் அதை ஏற்றுக் கொண்டு ஆய்வுக்கு செல்லலாம். எந்த இடத்தில் உணவு தரமற்று உள்ளது. அண்ணாமலையை வரச் சொல்லுங்கள் ஆய்வு செய்வோம், என்றார்.

The post அண்ணாமலைக்கு டெல்லியில் பளார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Palar ,Minister ,Sekharbhabu ,Perambur ,Tamil Nadu ,K. ,STALIN ,HUMANITARIANISM ,DIMUKA ,EASTERN DISTRICT OF ,CHENNAI ,Puyanthoppu Battalam Sivarao Road ,Sola Angalamman Temple Street ,Bangalore ,Delhi ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்