×

ரூ.23,622 கோடிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி

புதுடெல்லி: “2024-25ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது” என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் எக்ஸ் தள பதிவில், “2023-24ம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ரூ.21,083 கோடியாக இருந்தது.

அது 2024-25ம் ஆண்டில் ரூ.23,622 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தற்சார்பு இந்தியா மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய பயணத்தில் இந்தியாவின் ஒரு சிறப்புமிக்க மைல்கல். 2029ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் ரூ.50,000 கோடி இலக்கை அடைய இந்தியா தயாராக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

The post ரூ.23,622 கோடிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி appeared first on Dinakaran.

Tags : Arms ,New Delhi ,India ,Union Government ,Union Defence Minister ,Rajnath Singh ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...