×

ஒவ்வொரு வாரமும் புதிய பேருந்துகள் வருகிறது; பழைய பஸ்கள் மாற்றப்படும் அமைச்சர் சிவசங்கர் தகவல்

கேள்வி நேரத்தின் போது மானாமதுரை எம்எல்ஏ ஆ.தமிழரசி (திமுக) பேசுகையில், ‘கடந்த ஆட்சியில் பழுதடைந்த பேருந்துகள் எல்லாம் என்னுடைய தொகுதியைச் சுற்றிலும் இயக்கப்படுகின்றன. பழுதடைந்த பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

இதற்கு பதில் அளித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘போக்குவரத்து துறைக்கு புத்துயிர் ஊட்டுகின்ற வகையில், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் புதிய பேருந்துகளை வாங்க அறிவிப்பு கொடுத்து, அதற்கான டெண்டர் விடப்பட்டு, தற்போது தமிழ்நாடு முழுவதும் 3,500 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. மீதி பேருந்துகள் படிப்படியாக தயாரிக்கப்பட்டு, கூடு கட்டும் பணி முடிவு பெற்று வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட முதல்வர் நாகப்பட்டினத்திற்கு வருகை தந்திருந்தபோது 105 பேருந்துகளை அங்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார். எனவே, ஒவ்வொரு வாரத்திலும் புதிய, புதிய பேருந்துகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, பழைய பேருந்துகள் மாற்றப்படும்,’ என்றார்.

The post ஒவ்வொரு வாரமும் புதிய பேருந்துகள் வருகிறது; பழைய பஸ்கள் மாற்றப்படும் அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Manamadurai ,MLA A. Tamilarasi ,DMK ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...