×

சிறுவர்களுடன் பாசமாக பழகும் கோயில் யானை: திருநள்ளாறு கோயிலில் நெகிழ்ச்சி

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு 17 வயதான பிரக்ரிதி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை, கோயிலுக்கு வரும் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறது. காரைக்கால் நேதாஜி பகுதியை சேர்ந்த சகோதரர்களான சிறுவர்கள் யுவபாரதி, நாராயணன் ஆகியோர் தினம்தோறும் மாலை நேரத்தில் திருநள்ளார் கோயிலுக்கு யானை பிரக்ருதியை பார்க்க வருவர். யானை பிரக்ரிதியை பார்க்க வரும் போதெல்லாம் வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளை சிறுவர்கள் வாங்கி வருவர். இதனால் நண்பர்கள் போல் 2 பேரிடமும் யானை பிரக்ரிதி பழகி வருகிறது. மேலும் சிறுவர்களுடன் யானை பிரக்ரிதி விளையாடும். பின்னர் வீட்டுக்கு செல்லும்போது யானைக்கு சிறுவர்கள் டாடா காண்பிப்பர். அப்போது பதிலுக்கு தனது தும்பிக்கையால் டாடா சொல்லி சிறுவர்களை ஆசீர்வாதம் செய்து யானை பிரக்ரிதி அனுப்பி வைக்கும். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சிறுவர்களுடன் கோயில் யானை பிரக்ரிதி பாசமாக பழகி வரும் வீடியோவை பார்த்து பலரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post சிறுவர்களுடன் பாசமாக பழகும் கோயில் யானை: திருநள்ளாறு கோயிலில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirunallaru Temple ,Karaikal ,Thirunallar ,Lord Saneeswara ,Prakriti ,Tirunallaru ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...