×

திருப்பூர் பிரியாணி கடைகளில் அலைமோதிய கூட்டம்: ஒரே நாளில் 40 டன் பிரியாணி விற்பனை!

திருப்பூர்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் காங்கேயம் சாலை பிரியாணி கடை வீதியில் ஏராளமான கூட்ட நெரிசல் காணப்பட்டது. இப்பகுதியில் மட்டும் 60க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் ரம்ஜான் தினத்தன்று பிரியாணி உண்ண வேண்டும் என மக்கள் ஆர்வம் காட்டியதால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

மேலும் சில கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பிரியாணி வாங்கிச் சென்றனர். அதே நேரத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் நண்பர்களுக்கு வழங்க அதிக அளவில் பிரியாணி ஆர்டர் செய்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 40 டன் பிரியாணி விற்பனையாகியுள்ளது.

The post திருப்பூர் பிரியாணி கடைகளில் அலைமோதிய கூட்டம்: ஒரே நாளில் 40 டன் பிரியாணி விற்பனை! appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Biryani ,Tirupur Kangeyam Road Biryani Shop Road ,eve ,Ramzan festival ,Ramzan day… ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!