×

உதகையில் நாளை முதல் ஜூன் 5ம் தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதிப்பு

உதகை: உதகையில் நாளை முதல் ஜூன் 5ம் தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்தது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டகலை துறைக்கு சொந்தமான 7 இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வருவர். அவர்களை மகிழ்விக்கும் வகையில், உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி உட்பட கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

இதனால், தாவரவியல் பூங்கா உட்பட 7 பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு ஏப்.1 முதல் தடை விதிக்கபட்டுள்ளது. பூங்காவில் உள்ள நடைபாதையோரம், மலர் பாத்திகளில் மலர் செடிகள் சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

 

 

 

The post உதகையில் நாளை முதல் ஜூன் 5ம் தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Horticulture Department ,Uthaka ,DEPARTMENT ,UDAKA ,Botanical Garden ,Rose Garden ,Tea Park ,Kunnur Sims Park ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...