×

சிஎம்டிஏ சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 2025 – 2026ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்படவுள்ள புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி சென்னை, எழும்பூர், தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு தலைமையில் 2025-2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்படவுள்ள புதிய அறிவிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரபாகர், தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் ருத்ரமூர்த்தி, பாலசுப்ரமணியன், ரவிக்குமார், கண்காணிப்புப் பொறியாளர்கள் ராஜமகேஷ்குமார், பாலமுருகன், தலைமை நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சிஎம்டிஏ சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister Sekarbabu ,CMDA ,Chennai ,Minister ,Sekarbabu ,Chennai Metropolitan Development Authority ,Tamil ,Nadu ,Chief Minister ,Natarajan Mansion ,Thalamuthu, Egmore, Chennai… ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...