×

அடுத்தடுத்து கார்கள் மோதல் உயிர் தப்பினார் அர்னால்ட்

சென்னை: லாஸ் ஏஞ்சல்சில் நடந்த கார் விபத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் உயிர் தப்பினார். டெர்மினேட்டர், கமாண்டோ, கேனன் தி பார்பேரியன், பிரடியேட்டர், டோட்டல் ரீகால், ட்ரூ லைவ்ஸ் படங்கள் மூலம் உலகப்புகழ் பெற்றவர் அர்னால்ட் சொவர்கனேஸர். 74 வயதாகும் அர்னால்ட் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருந்தார்.நேற்று முன்தினம் மாலை அவர், தனது பேவரைட் சிவப்பு நிற டொயோட்டா காரில் அலன்போர்ட் நகரின் சாலை ஒன்றில் பயணம் செய்தார். அப்போது ஏற்பட்ட திடீர் போக்கு வரத்து குழப்பம் காரணமாக, கார்கள் ஒன்றுக்கொன்று வரிசையாக மோதிக்கொண்டு பெரும் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் அர்னால்ட், தனது காரில் இருந்த ஏர்பேக் உதவியால் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். அவரது கார் மோதியதில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார். உடனடியாக  அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்….

The post அடுத்தடுத்து கார்கள் மோதல் உயிர் தப்பினார் அர்னால்ட் appeared first on Dinakaran.

Tags : Arnold ,Los Angeles ,Hollywood ,
× RELATED ஹாலிவுட்டில் எனது இருண்ட காலம்: பிரியங்கா சோப்ரா பிளாஷ்பேக்