×

கோயில் சிலை சேதம்; ஜெய்ப்பூரில் வன்முறை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் டோங்க் சாலையில் தேஜாஜி கோயில் உள்ளது. இங்குள்ள ஒரு கடவுளின் சிலை சேதப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இந்துஅமைப்பினர் சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே டயர்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். லேசான தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் டோங்க் சாலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

The post கோயில் சிலை சேதம்; ஜெய்ப்பூரில் வன்முறை appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Tejaji ,Tonk Road ,Jaipur, Rajasthan ,
× RELATED ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்:...