- ஐபிஎல்
- சென்னை
- ஐபிஎல் டி 20
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- ராயல் சேலஞ்சர்ஸ்
- பெங்களூர்
- எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்
- செப்புக், சென்னை
- தின மலர்
சென்னை: சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 25 நபர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 48 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்த 25 பேர் கைது appeared first on Dinakaran.
